Print this page

அமைச்சர்களுடன் இன்று கூட்டணி பேச்சு  

February 06, 2019

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளஅதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

அமைச்சர்களான நவீன் திசாநாயக்க, ரவீந்திர சமரவீர ஆகியோரின் மத்தியஸ்துடன் முதலாளிமார் சம்மேளனத்துடன் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்படும் என, கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேஷன் கூறியுள்ளார்.